தெலுங்கில் நடிகை சமந்தா நடித்துள்ள ‘ஓ பேபி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நந்தினி ரெட்டி இயக்கத்தில் தெலுங்கில் உருவாகியுள்ள ‘ஓ பேபி’ திரைப்படம் வரும் ஜூலை.5ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், நடிகை சமந்தா இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் வெளியாகியுள்ளது.
போட்டோ ஸ்டூடியோவுக்குச் செல்லும் வயதான பெண், மந்திர சக்திகள் மூலம் 20 வயது பெண்ணின் தோற்றத்தை பெறுகிறார். அதன் பின் அவருக்கு ஏற்படும் சிக்கல்களை நகைச்சுவையுடன் சுவாரஸ்யமாகக் கூறும் விதத்தில் இப்படம் உருவாகியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு வெளியான ‘மிஸ் கிரானி’ என்ற கொரியன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.
இதில் வயதான தோற்றத்தில் நடிகை லட்சுமியும், இளம் தோற்றத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். மேலும், நாக சௌர்யா, லக்ஷ்மி, ஊர்வசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு மிக்கி ஜே. மேயர் இசையமைக்கிறார். ‘ஓ பேபி’ திரைப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்த படத்தின் மூலம் சிறிய இடைவெளிக்கு பிறகு பாடகி சின்மயி சமந்தாவுக்காக டப்பிங் பேசியுள்ளார்.
உனக்கு பாட்டி டா நான்.. அத மட்டும் சொன்ன கொன்னுடுவேன் உன்ன - சமந்தாவின் ஓ பேபி டிரைலர் வீடியோ