"நான் பெண்களை தான் சைட் அடிப்பேன்" - சாய் பல்லவி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை சாய் பல்லவி தனது நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘என்.ஜி.கே’ திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை Behindwoods தளத்திடம் பகிர்ந்துக் கொண்டார்.

Sai Pallavi speaks about Her Personals with Thara Show

ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் பாலா சிங், பொன்வண்ணன், உமா பத்மநாபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவும், பிரவீன் கே.எல் படத்தொகுப்பும் கவனித்துள்ளனர்.

அனல் பறக்கும் வித்தியாசமான அரசியல் கதைக்களத்தில், செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில், Behindwoods-ன் Personals வித் தாரா நிகழ்ச்சியில் பங்கேற்ற சாய் பல்லவி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக்கொண்டார்.

அதில் ‘பார்த்தவுடன் காதலில் நம்பிக்கை இருக்கிறதா?’ என்று கேட்ட கேளிவிக்கு பதியளித்த சாய் பல்லவி ‘அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை.

அதே நேரத்தில் ஆண்களை விட, பெண்களை தான் அதிகம் சைட் அடிப்பேன், அதாவது, அவர்கள் அணிந்திருக்கும் உடை விஷயத்தை பார்ப்பேன்.

வித்தியாச வித்தியாசமாக பெண்கள் உடை அணிந்திருப்பதை கவனிப்பேன்’ என்று கூறியுள்ளார்.

"நான் பெண்களை தான் சைட் அடிப்பேன்" - சாய் பல்லவி வீடியோ