"ப்ரேமம் 2-ல மீண்டும் நான் தான் மலர் டீச்சர் " - சாய் பல்லவி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை சாய் பல்லவி தனது நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘என்.ஜி.கே’ திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை Behindwoods தளத்திடம் பகிர்ந்துக் கொண்டார்.

Sai Pallavi speaks about working with Suriya and Selvaraghavan in NGK

ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் பாலா சிங், பொன்வண்ணன், உமா பத்மநாபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவும், பிரவீன் கே.எல் படத்தொகுப்பும் கவனித்துள்ளனர்.

அனல் பறக்கும் வித்தியாசமான அரசியல் கதைக்களத்தில், செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில், Behindwoods-ன் Personals வித் தாரா நிகழ்ச்சியில் பங்கேற்ற சாய் பல்லவி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக்கொண்டார்.

‘என்.ஜி.கே திரைப்படத்தில் தனித்துவமான நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது. 2 ஹீரோயின்கள் இருப்பினும், இருவரது கேரக்டருக்குமே முக்கியத்துவம் கொடுத்துள்ளார் இயக்குநர் செல்வராகவன் என சாய் பல்லவி கூறியுள்ளார்.

மேலும்,நடிகைககள் எப்போதும் தங்கள் கைப்பையில் மேக்கப் ஐட்டங்களை தான் வைத்திருப்பார்கள், ஆனால் சாய் பல்லவி தன் பையில் எப்போதும் ஐடி, போன் உள்ளிட்ட சில அத்யாவசிய பொருட்களை மட்டுமே வைத்திருப்பாராம். மேலும் ஒரு பாக்கெட் விபூதி எப்போதும் பையில் இருக்குமாம்.

சின்ன வயதில் இருந்தே சாய் பல்லவி விபூதி வாயில் போட்டு சாப்பிட்டு பழகிவிட்டாராம். அதற்காக எப்போதும் பையில் விபூதி வைத்திருப்பேன் என சாய் பல்லவி கூறியுள்ளார்.

பிரேம் 2 பற்றி தாரா கேட்ட கேளிவிக்கு பதியளித்த சாய் பல்லவி  ப்ரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ்   என்னை அழைத்தால் கண்டிப்பாங்க மீண்டும் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று  கூறியுள்ளார்.

"ப்ரேமம் 2-ல மீண்டும் நான் தான் மலர் டீச்சர் " - சாய் பல்லவி வீடியோ