“செவ்வாய்கிரகத்துக்கு ஒரு டிரிப்” விஜய் சேதுபதியின் புது ஐடியா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தான் தயாரித்துள்ள சென்னை பழனி மார்ஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

Vijay Sethupathi’s Chennai Palani Mars first look

விஜய் சேதுபதி தயாரித்த ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கியவர் பிஜு. இவர் அடுத்து இயக்கும் படம் சென்னை பழனி மார்ஸ். இந்த படத்தையும் விஜய் சேதுபதி தான் தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கு வசனமும் விஜய் சேதுபதி தான்.

சென்னை பழனி மார்ஸ் படம் முழுக்க முழுக்க பயணத்தை மையப்படுத்திய காமெடி படமாக உருவாகி இருக்கிறது. எல்லா மனிதனுக்கும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த கனவை நோக்கிய பயணத்தை டார்க் ஹூமர் பாணியில் படமாக்கியிருக்கிறார்கள்.

பாரி இளவழகன், வசந்த் மாரிமுத்து, பிரவீண் ராஜா, இம்தியாஸ் முகமது, ராஜேஷ் கிரி பிரசாத், வின் ஹாத்ரி ஆகியோர் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் மதன்குமார் தக்சிணா மூர்த்தி, ஏ.ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை பழனி மார்ஸ் படத்தின் பர்ஸ்ட் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி நேற்று வெளியிட்டார். அந்த போஸ்டரில் சிறுவர்கள் ரயில் விளையாட்டு விளையாடுவது போல், முக்கிய நடிகர்கள் சிலர் ஒரு விண்வெளி வீரருக்கு பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர். ஒவ்வொருவரும் ஒருவிதமான முகபாவனையில் இருக்கின்றனர்

சென்னை பழனி மார்ஸ் படத்தின் பர்ஸ்ட் போஸ்டருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது