குமரா வாடா கண்ணா ..!- என்.ஜி.கே "U" டர்ன்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் சென்சார் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

Selvaraghavan-Suriya's NGK gets Censored and certified as U

ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் பாலா சிங், பொன்வண்ணன், உமா பத்மநாபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவும், பிரவீன் கே.எல் படத்தொகுப்பும் கவனித்துள்ளனர்.

இந்நிலையில், ‘என்.ஜி.கே’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் மே.31ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

அனல் பறக்கும் வித்தியாசமான அரசியல் கதைக்களத்தில், செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

இப்படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயீஷா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரை போற்று’ என்ற படத்திலும் சூர்யா நடித்து வருகிறார்.