வருங்கால கணவர் எப்படி இருக்கணும் தெரியுமா?- லிஸ்ட் போடும் ரகுல் ப்ரீத்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘என்.ஜி.கே’ திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை Behindwoods தளத்திடம் பகிர்ந்துக் கொண்டார்.

Rakul Preet Singh opens up about the qualities of her future husband

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ என்கிற ‘நந்த கோபாலன் குமார்’ திரைப்படம் வரும் மே.31ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், Behindwoods-ன் Personals வித் தாரா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய ரகுல், ‘என்.ஜி.கே திரைப்படத்தில் தனித்துவமான நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது. 2 ஹீரோயின்கள் இருப்பினும், இருவரது கேரக்டருக்குமே முக்கியத்துவம் கொடுத்துள்ளார் இயக்குநர் செல்வராகவன். என்.ஜி.கே ரிலீஸ் தேதி அறிவித்த போதிலிருந்தே படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது. அனைவரும் தியேட்டரில் போய் படத்தை பாருங்கள்’ என கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து தனது சொந்த வாழ்க்கை குறித்தும், தனது வருங்கால கணவர் பற்றிய எதிர்ப்பார்ப்புகள் குறித்தும் பகிர்ந்துக் கொண்டார். அவர் கூறுகையில்,‘6 அடி உயரம் இருக்கணும், வாழ்க்கையில் ஒரு பேஷன் இருக்கணும், உண்மையா இருக்கணும், என்னை போலவே கூலாக ஜாலியாக இருக்கணும், இது போல 20 பாயிண்ட் இருந்தது என் அண்ணன் என்னை கலாய்த்ததால் பலவற்றை குறைத்துவிட்டேன். ரொம்ப நாட்களாகவே சிங்கிளா தான் இருக்கேன் என ரகுல் ப்ரீத் சிங் கூறினார்.

வருங்கால கணவர் எப்படி இருக்கணும் தெரியுமா?- லிஸ்ட் போடும் ரகுல் ப்ரீத் வீடியோ