'மெர்சல்', 'காலா'வுக்கு பிறகு இதனை செய்திருக்கும் சூர்யாவின் 'என்ஜிகே'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே எனும் படத்தில் நடித்துள்ளார் சூர்யா. இந்த படத்தில் அவருடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்  சிங், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Twitter released Emoji for Suriya's NGK after Kaala and Vijay's Mersal

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல். இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகிற மே 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்கு டிவிட்டரில் எமோஜி வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு #NGK #NGKFire #NGKFromMay31 ஆகிய மூன்று ஹேஷ்டேக்குகளை டிவிட்டரில் பதிவு செய்தால் எமோஜி கிடைக்கும்.

தென்னிந்திய மொழிகளில் முதன் முதலாக மெர்சல் திரைப்படத்தில் எமோஜி வெளியாகி கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்துக்கும் எமோஜி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.