'தர்மதுரை' படத்துக்கு பிறகு சீனு ராமசாமி - விஜய் சேதுபதி இணைந்திருக்கும் படம் 'மாமனிதன்'. இந்த படத்தில் காயத்ரி முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்க விருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படம் குறித்து முக்கிய தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை கிளாப்போர்டு சத்யா பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிறுவனம் தான் விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள 'சிந்துபாத்' படத்தின் வெளியீட்டு உரிமையையும் பெற்றுள்ளாராம். சிந்துபாத் திரைப்படம் நாளை(ஜூன் 27 ) வெளியாகவிருக்கிறது.