'என்ஜிகே' படத்துக்கு பிறகு சூர்யா நடித்து வரும் படம் 'காப்பான்'. இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துவருகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டைட்டிலை பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது டைட்டிலை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கில் இந்த படத்துக்கு பந்தோபஸ்த் எனப் பெயரிடப்பட்டுள்ளது. போஸ்டரை வெளியிட்டு ராஜமெளலி படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.