பிரபல நடிகை விஜய நிர்மலா மறைவு: சூர்யா, மகேஷ் பாபு பட நிகழ்வுகள் தள்ளிவைப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமை கொண்டவர் விஜய நிர்மலா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

Suriyas Kaappaan telugu title has been postponed for Vijay Nirmala demise

மேலும் தெலுங்கில் 44 படங்களை இயக்கியுள்ளார். அதனால் அதிக  படங்களை இயக்கிய பெண் என்று 2002 ஆம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை பட்டியலிலும் அவர் இடம் பெற்றார்.

இவர் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும் பிரபல நடிகருமான கிருஷ்ணாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மகேஷ் பாபுவின் 'மஹர்ஷி' படத்தின் 50 வது நாள் கொண்டாட்ட விழா தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'காப்பான்' படத்தின் தெலுங்கு டைட்டிலை ராஜமௌலி இன்று (27.06.2019) வெளியிடுவதாக இருந்தது.  தற்போது அதனை நாளை ஒத்திவைத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.