www.garudabazaar.com
iTechUS

தனது இயக்கத்தில் 19 படங்கள் நடித்த விஜயகாந்த் -ஐ நேரில் சந்தித்த SA சந்திரசேகர்.. என்ன விசேஷம்.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து பல ஹிட் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். சட்டம் ஒரு இருட்டறை உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய S.A.சந்திரசேகர் தமது மகனும் நடிகருமான விஜய்யை வைத்து பல படங்களை இயக்கியவர்.

SA Chandrasekar meets Vijayakanth Trending Photos

                     Images are subject to © copyright to their respective owners.

Also Read | அஞ்சலி நடிப்பில் பிரபல ஓடிடியில் வெளியான “ஜான்சி” வெப் சீரிஸ்.. விறுவிறுப்பான 2வது சீசன்..!

பிற்காலத்தில் பிரம்மாண்ட சமூக பிரச்சனை படங்களை இயக்கிய இயக்குநர் பவித்ரன், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படங்களில் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே எஸ்.ஏ.சந்திரசேகர் அடுத்ததாக நான் கடவுள் இல்லை எனும் திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் 70வது திரைப்படம் தான் இந்த ‘நான் கடவுள் இல்லை’ திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. சமுத்திரகனி, இனியா, சாக்‌ஷி அகர்வால், சரவணன் மற்றும் பலர் நடிப்பிலான இந்த படம் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகிறது.

இதேபோல் கேப்டன் என்றும் புரட்சிக்கலைஞரும் என்றும் அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த்தின் திரைவாழ்க்கை எஸ்.ஏ.சந்திரசேகரால் செப்பனிடப்பட்டது என சொல்லலாம். ஆம், சமூகம் சார்ந்து எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுமார் 19 கமர்ஷியல் படங்களில் நடித்தவர் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராக விளங்கியவருமான நடிகர் விஜயகாந்த் பின்னாளில் தேமுதிக கட்சியின் தலைவராக திகழ்ந்தார். 

SA Chandrasekar meets Vijayakanth Trending Photos

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் அண்மைக் காலமாக உடல்நலத்தை கவனித்துக்கொண்டு ஓய்வில் வீட்டில் இருந்து வரும் விஜயகாந்த்தை, விஜயகாந்த்தின் திருமண நாளான இன்று நேரில் சந்தித்துள்ளார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். இது தொடர்பாக, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “என் உயிரை நான் சந்தித்த போது 😀” என பதிவிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

Also Read | சொந்த ஊரில் புது வீடு கட்டும் நடிகை நீலிமா.. குடும்பத்துடன் வெளியிட்ட சூப்பர் PHOTOS!

தொடர்புடைய இணைப்புகள்

SA Chandrasekar meets Vijayakanth Trending Photos

People looking for online information on Captain, SA Chandrasekar, Vijay, Vijayakanth will find this news story useful.