www.garudabazaar.com
iTechUS

THALAPATHY 67: இந்தா வந்துருச்சுல.. புதிய போஸ்டர் & அறிக்கையுடன் வெளியான தளபதி 67 படத்தின் அறிவிப்பு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் & லோகேஷ் கனகராஜ் இணையும் புதிய படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

Vijay Lokesh Kanagaraj Thalapathy 67 Team Latest Official Statement

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | ராம் & 'தமிழ்ப்படம்' சிவா இணையும் புதிய படம்.. ஷூட்டிங் எப்போ? எங்கே? #BREAKING அப்டேட்

தளபதி 67 படத்தின் மூலம் 3வது முறையாக விஜய்யுடன் கைகோர்க்கும் செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டுடியோ என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை தளபதி 67 படக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தங்களது பெருமைமிக்க புதிய படைப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் உற்சாகம் அடைகிறது. பிளாக் பஸ்டர் வெற்றி பெற்ற மாஸ்டர் மற்றும் வாரிசு ஆகிய படங்களை தொடர்ந்து, தளபதி விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றுவதில் தாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

Vijay Lokesh Kanagaraj Thalapathy 67 Team Latest Official Statement

Images are subject to © copyright to their respective owners.

தளபதி 67 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை 'மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். "S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாஸ்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரின் கூட்டணியில் உருவாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Lokesh Kanagaraj Thalapathy 67 Team Latest Official Statement

Images are subject to © copyright to their respective owners.

கத்தி, மாஸ்டர், பீஸ்ட் என அதிர வைக்கும் ஆல்பங்களை கொடுத்த ராக்ஸ்டார் அனிருத், தளபதி 67 படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்த்துள்ளார்.

இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் கவனிக்கின்றனர். படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

Vijay Lokesh Kanagaraj Thalapathy 67 Team Latest Official Statement

Images are subject to © copyright to their respective owners.

படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். தளபதி 67 படத்திற்கு உங்களுடைய ஆதரவையும் வாழ்த்துக்களையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். "அன்புடன்" தளபதி 67 பட குழுவினர்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also Read | குடும்பத்துடன் இலங்கையில் சரத் &வரலெட்சுமி.. பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் எடுத்த டூர் VIDEO!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Lokesh Kanagaraj Thalapathy 67 Team Latest Official Statement

People looking for online information on Lokesh Kanagaraj, Thalapathy 67, Thalapathy 67 Latest Update, Vijay will find this news story useful.