பேட்மேனுக்கு சென்ற தளபதி விஜய்யின் மோதிரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கும் படம் பிகில். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

Gopi Prasannaa tweets about Thalapathy Vijay and Nayanthara's Bigil

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, இந்துஜா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் தனது படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்த தளபதி விஜய், இந்த படத்தில் பணிபுரிந்த நடிகர், நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் என 300க்கும் மேற்பட்டோருக்கு தங்க மோதி வழங்கி சிறப்பு செய்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் பப்ளிசிட்டி டிஷைனர் கோபி பிரசன்னாவிற்கும் விஜய்யின் தங்க மோதிரம் கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த மோதிரத்தை பேட்மேனுக்கு அணிவித்திருந்த புகைப்படத்தை பகிர்ந்த அவர் பப்ளிசிட்டி டிஷைனராக முதல் விருது. நன்றி விஜய் சார் என்று குறிப்பிட்டுள்ளார்.