சிவா இயக்கத்தில் தல அஜித் 'விஸ்வாசம்' படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரித்திருந்தார்.

இந்த படத்தில் நயன்தாரா, விவேக், யோகிபாபு, ரோபோ ஷங்கர், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்திருந்தார்.
இதனையடுத்து போனி கபூர் தயாரிப்பில் தல அஜித், 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத் இயக்குகிறார்.
இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைபெற்றது. இந்த படம் முதலில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக கூறப்பட்டது.
எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படம் இந்த படம் முன்னதாகவே ஜூலை 25 அல்லது ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரபாஸின் சாஹோ வெளியாகவிருப்பதால் நேர்கொண்ட பார்வை நீண்ட நாட்கள் திரையரங்குகளில் ஓட வேண்டும் என்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.