'தல 60' படத்தில் பைக் ரேஸராக வருகிறாரா அஜித் ? - சீக்ரெட் சொல்லும் தயாரிப்பாளர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'விஸ்வாசம்' படத்தின் வெற்றிக்கு பிறகு தல அஜித் ஹீரோவாக நடித்து வரும் படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்தை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களின் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார்.

Thala 60 is not racing film said Ajith's Nerkonda Paarvai producer

இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் Behindwoods Tvக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது தல அஜித்தின் 60 வது படம் குறித்தும், அதில் அஜித் பைக் ரேஸராக வருவதாக வெளியான செய்தி குறித்தும் தொகுப்பாளர் அக்னி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் போனி கபூர், அஜித்தின் 60வது படம் பைக் ரேஸிங் பற்றிய படம் அல்ல. ஆனால் அது முழுக்க முழுக்க ஆக்சன் படம். அதில் பைக், கார் ரேஸிங் காட்சிகள், திரில், அட்வெஞ்சர் ஆகியவை இடம் பெறும் என்று கூறினார்.

'தல 60' படத்தில் பைக் ரேஸராக வருகிறாரா அஜித் ? - சீக்ரெட் சொல்லும் தயாரிப்பாளர் வீடியோ