‘அ, ஆ எழுதி அம்மா-அப்பாவோட பாராட்ட விட இது பெரிசு’ - பா.ரஞ்சித் குறித்து இயக்குநர் பெருமிதம்
முகப்பு > சினிமா செய்திகள்By Gokul | Jul 11, 2019 11:40 AM
பா.ரஞ்சித் தயாரிப்பில் தினேஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’. இதை ரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்குகிறார். தென்மா இசையமைக்கிறார்.

அட்டக்கத்தி படத்திற்கு பின், மீண்டும் ரஞ்சித் - தினேஷ் கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்தப் படம் சமூகம், அரசியல் சார்ந்த கதைக் களத்தில் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் இயக்குனர் அதியன் ஆதிரை " என் வாத்தியார் ,எனது தயாரிப்பாளர் பா.இரஞ்சித் நேற்று 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தை பார்த்தபிறகு வியந்து, கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பெருமைப்பட்ட தருணம். முதன் முதலில் 'அ, ஆ' எழுதி பெற்றோரிடம் வாங்கிய பாராட்டை விட ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது" என்று ட்வீட் செய்துள்ளார்
என் வாத்தியார் ,எனது தயாரிப்பாளர் @beemji நேற்று
'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தை பார்த்தபிறகு வியந்து, கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பெருமைப்பட்ட தருணம். முதன் முதலில் 'அ, ஆ' எழுதி பெற்றோரிடம் வாங்கிய பாராட்டை விட ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது #IUPKG pic.twitter.com/daR1ePslQa
— Athiyan Athirai (@AthiraiAthiyan) July 11, 2019