Pattamboochi

“விஜய்க்கு கதை சொன்னேன்….” “அஜித்துக்கு கதை இருக்கா?”… நடிகர் R J பாலாஜி Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வீட்ல விசேஷம் படத்தின் ரிலீஸூக்கு பிறகு நடிகர், இயக்குனர் RJ பாலாஜி Behindwoods-க்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார்.

RJ balaji veetla vishesham exclusive interview Behindwoods

வீட்ல விசேஷம்

LKG மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களின் வெற்றியை அடுத்து தற்போது RJ பாலாஜி, போனி கபூரின் பே வாட்ச் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள வீட்ல விஷேசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரோடு அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி மற்றும் மலையாள நடிகை லலிதா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் இந்தியில் வெளியான பதாய் ஹோ படத்தின் ரீமேக் ஆகும். தேசியவிருதையும் இந்தப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கியும் உள்ளார் பாலாஜி. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளின் நடுவே நடைபெற்று கவனத்தைப் பெற்றது.

RJ balaji veetla vishesham exclusive interview Behindwoods

நேர்காணல்

இந்த படத்தின் ப்ரமோஷன்களை மிகவும் வித்தியாசமான பாணியில் RJ பாலாஜி மேற்கொண்டார். இதையடுத்து ஜூன் 17 ஆம் தேதி இந்த  திரைப்படம் ரிலீஸாகி பரவலான கவனத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. படம் ரிலீஸான பின்னரும் தொடர்ந்து ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இநிலையில் தற்போது அவர் Behindwoods சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் ‘வீட்ல விசேஷம்’ படம் பற்றியும் தனது எதிர்கால திட்டங்கள் குறித்தும் பல பிரத்யேக தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

RJ balaji veetla vishesham exclusive interview Behindwoods

விஜய் அஜித்துக்கு கதை?

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் அவரிடம் ‘விஜய்க்கு கதை சொல்லிவிட்டதாக அவர் குறிப்பிட்டு இருந்ததை’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “ஆமாம் விஜய் சார்க்கு கதை சொல்லிவிட்டேன். அவருடன் இரண்டு மணிநேரம் இருந்தேன். மூக்குத்தி அம்மன் குறித்து அவர் மிகவும் பாராட்டினார். அவருக்கு சொன்ன கதையில் முழுமையாகவும் இரண்டாம் பாதியில் எப்படி செல்லும் என்றும் கூறினேன். இந்த படம் ஒரு பெரிய படமாக இருக்கும். ஒரு வருடம் தேவைப்படும் என்று கூறினேன். அவர் மூக்குத்தி அம்மன் மாதிரி விரைவாக முடிக்கக்கூடிய படமாக எதிர்பார்த்துள்ளார். நான் தளபதி 67 பண்ணலைன்னா பரவால்ல சார் தளபதி 77, தளபதி 87 பண்ணிக்கிறேன் எனக் கூறினேன். அதைக் கேட்டு சிரித்தார்” என்று கூறியுள்ளார்.

அதுபோல அஜித்துக்கு கதை ஏதாவது இருக்கிறதா என்ற கேள்விக்கும் அவர் ”அவர் விருப்பப்பட்டால் நடக்கும். நான் இப்போது உடனே அவர்களோடு படம் பண்ணவேண்டும் என்ற அவசரத்தில் இல்லை” என பதிலளித்துள்ளார்.

“விஜய்க்கு கதை சொன்னேன்….” “அஜித்துக்கு கதை இருக்கா?”… நடிகர் R J பாலாஜி EXCLUSIVE வீடியோ

RJ balaji veetla vishesham exclusive interview Behindwoods

People looking for online information on Ajith, R J Balaji, Vijau will find this news story useful.