Pattamboochi

மாளவிகா மோகனனுக்கு தமிழ்நாட்டுல இந்த ஊர் தான் ரொம்ப பிடிக்குமாம்.. ஏன்னா இதான் ஒரே காரணமாம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகத்தில் தனக்கு பிடித்த ஊர் குறித்து நடிகை மாளவிகா மோகனன் டிவீட் செய்துள்ளார்.

Malavika Mohanan tweet about Tamilnadu Kumbakonam Temple City

Also Read | தி நகரில் உள்ள பிரபல நிறுவன நகையுடன் PHOTOSHOOT.. வேறலெவல் லுக்கில் அசத்திய பிரியா பவானி சங்கர்!

நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மாளவிகாவுக்கு முக்கிய இடமுண்டு.

Malavika Mohanan tweet about Tamilnadu Kumbakonam Temple City

  மாளவிகா மோகனன், பிரபல ராப் இசை பாடகர் பாட்ஷா & பாடகர் பாயல் தேவ்வுடன் இணைந்து இசை வீடியோவில் நடித்துள்ளார். TAUBA என்ற இந்த இசை வீடியோவில் மாளவிகா மோகனன் & பாட்ஷா நடனமாடி நடித்துள்ளனர்.இன்று (24.06.2022) இந்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Malavika Mohanan tweet about Tamilnadu Kumbakonam Temple City

இதனை முன்னிட்டு ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வை டிவிட்டரில் மாளவிகா மோகனன் நடத்தினார். ரசிகர்களின் பல கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார்.

அதில் "எப்போ நீங்கள் கும்பகோணம் வருவீங்க?" என ரசிகர் கேட்ட கேள்விக்கு நடிகை மாளவிகா மோகனன் பதில் அளித்துள்ளார். அதில், "தமிழகத்தில் கும்பகோணம் எனக்கு மிகவும் பிடித்த ஊர். அங்கு எங்கு திரும்பினாலும் கோயில்கள் இருக்கின்றன" என பதில் அளித்துள்ளார். இந்த ட்வீட் தற்போது செம்ம வைரலாகி வருகிறது.

Malavika Mohanan tweet about Tamilnadu Kumbakonam Temple City

கடைசியாக தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்து இருந்தார். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் கடந்த 2022 மார்ச் 11 ஆம் தேதி இப்படம் நேரடி பிரீமியராக வெளியானது. தாரா எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்தார்.

Also Read | இந்த வாரம் OTT-க்களில் ரிலீசாகும் திரைப்படங்கள் & வெப்-சீரிஸ்கள்.. ஒரு பார்வை!

தொடர்புடைய இணைப்புகள்

Malavika Mohanan tweet about Tamilnadu Kumbakonam Temple City

People looking for online information on Malavika Mohanan, Malavika mohanan tweet, Tamilnadu Kumbakonam Temple City will find this news story useful.