Pattamboochi

மணிகண்டன் கதையில் யோகி பாபு நடிக்கும் ‘பன்னி குட்டி’… லைகா வெளியிட்ட ரிலீஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யோகி பாபு நடித்துள்ள பன்னி குட்டி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Yogi babu panni kutty release date update

Also Read | 25 ஆண்டுகளுக்குப் பிறகு ‘டைட்டானிக்’… அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் 3 ஜேம்ஸ் கேமரூன் படங்கள்

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான யோகி பாபு நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மையக் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்த தர்மபிரபு, மண்டேலா உள்ளிட்ட சில படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து அவர் இப்போது பொம்மை நாயகி உள்ளிட்ட சில படங்களிலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பன்னிகுட்டி

கதிர் நடித்த 'கிருமி' என்ற படத்தை இயக்கியவர் அணுசரன் முருகையா. நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் இயக்கும் படம் 'பன்னி குட்டி'.  இந்த படத்தில் கருணாகரன், யோகிபாபு ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு 'முகமூடி', 'கிருமி', 'யுத்தம் செய்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த கே இசையமைக்கிறார். இந்த படத்தில் சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, டி.பி.கஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்துக்கு காக்க முட்டை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கிய மணிகண்டன் கதை எழுதியுள்ளார். சக்தி முருகன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Yogi babu panni kutty release date update

பன்னி குட்டி ரிலீஸ்

இந்த படம் சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸாகாமல் இருந்தது. இந்நிலையில் இப்போது இந்த படம் ஜூலை 8 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ’பன்னிகுட்டி’ படத்தின் இயக்குனர் தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள ‘சுழல்’ வெப் தொடரின் இயக்குனர்களில் ஒருவராக பணியாற்றியுள்ளார். சுழல் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Yogi babu panni kutty release date update

Also Read | “சில கதாபாத்திரங்கள் நம் மனதில்…. “ ‘கார்கி’ படத்தின் அப்டேட்டை வெளியிட்ட சூர்யா

தொடர்புடைய இணைப்புகள்

Yogi babu panni kutty release date update

People looking for online information on Panni kutty Movie, Panni kutty movie release updates, Yogi Babu will find this news story useful.