Veetla Vishesham Others Page USA

கெத்து லுக்கில் செம மாஸாக அட்லாண்டிக் பெருங்கடலை கடக்கும் அஜித்.. சூப்பர் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் அட்லாண்டிக் பெருங்கடலில் பயணம் மேற்கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Actor Ajithkumar Ferrying across the English Channel

அஜித் தனது திரைப்பட படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பைக்கை எடுத்துக்கொண்டு ரோட் ட்ரிப் போவது வாடிக்கையான ஒன்று. அது போல் தனது BMW  பைக்கை எடுத்துக்கொண்டு தல அஜித் ஐரோப்பாவில் பயணம் மேற்கொள்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Actor Ajithkumar Ferrying across the English Channel

அஜித்தின் நண்பரும், சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் டிவிட்டரில் இந்த புகைப்படங்களை வெளியிட்டார். ஐரோப்பா நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம் தற்போது நடந்து வருகிறது. இங்கிலாந்தில் தொடங்கிய சுற்றுப்பயணம் தற்போது பெல்ஜியம் நாட்டில் தொடர்ந்து வருகிறது. பெல்ஜியம் நகர வீதிகளில் எடுத்த இந்த புகைப்படங்கள் வைரலாகின.

இங்கிலீஷ் சேனலில் அஜித், கப்பலில் இங்கிலாந்தில் இருந்து பெல்ஜியம் செல்லும் போது அட்லாண்டிக் பெருங்கடலில் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை சுப்ரஜ் வெங்கட் பகிர்ந்துள்ளார். Schengen விசாவுக்கு உட்பட்ட 26 ஐரோப்பிய நாடுகளில் இந்த பைக் பயணம் நிகழ உள்ளது.

Actor Ajithkumar Ferrying across the English Channel

வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது. AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர். முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புனேயில் ஜூன் 15ஆம் தேதி முதல் துவங்கி உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Ajithkumar Ferrying across the English Channel

People looking for online information on Ajith Kumar, AK61 will find this news story useful.