“குட்டிப் பாப்பா வரப்போகுது”… “என்ன சொல்றீங்க…?” – வைரலாகும் R J பாலாஜியின் Prank வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

R J பாலாஜி வெளியிட்டுள்ள லேட்டஸ் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Veetla vishesham R J balaji new prank video went viral

Also Read | “VTK ஆடியோ ரிலீஸ தள்ளிவச்சிட்டு, எனக்காக… “ சிம்பு பத்தி பேசும்போது Emotional ஆன TR

RJ பாலாஜி…

பண்பலை தொகுப்பாளராக வேலை செய்துவந்த ஆர் ஜே பாலாஜி, தனது நகைச்சுவையான மற்றும் தனித்துவமான பேச்சால் ரசிகர்களைக் கவர்ந்தவர். சினிமா விமர்சனங்களை செய்துவந்த அதன் மூலம் கிடைத்த புகழ் வெளிச்சத்தால் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். முதலில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த அவர் LKG, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் கதையின் நாயகனாக நடித்து கவனம் பெற்றுள்ளார்.

Veetla vishesham R J balaji new prank video went viral

வீட்ல விசேஷம்…

அந்த படங்களை அடுத்து ஆர் ஜே பாலாஜி இப்போது போனி கபூரின் பே வாட்ச் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள வீட்ல விஷேசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரோடு அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி மற்றும் மலையாள நடிகை லலிதா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் இந்தியில் வெளியான பதாய் ஹோ படத்தின் ரீமேக் ஆகும். தேசியவிருதையும் இந்தப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கியும் உள்ளார் பாலாஜி. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளின் நடுவே நடைபெற்று கவனத்தைப் பெற்றது.

Veetla vishesham R J balaji new prank video went viral

Cross Talk with RJ balaji

இந்த படத்தின் ப்ரமோஷன்களை மிகவும் வித்தியாசமான பாணியில் RJ பாலாஜி மேற்கொண்டு வருகிறார். பல குடும்ப வளைகாப்பு நிகழ்ச்சிகளுக்கு சென்ற படக்குழுவினர், அடுத்து ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘புதுப்புது அர்த்தங்கள்’ சீரியலில் நடித்தனர். இந்நிலையில் தற்போது RJ பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் படத்தில் வருவது வயதான அம்மா கர்ப்பமாக இருப்பது அவர்களின் குழந்தைகளுக்கு தெரியவரும் போது எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பது இடம்பெற்றுள்ளது. போன் செய்து அவர்களின் தாயார் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் போல பேசி, அவர்கள் அந்த செய்திக்கு எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எதிர்வினையாற்ற, அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RJ Balaji (@irjbalaji)

Also Read | “யாருக்காவது பர்த்டே wish பண்ணா போதும்… யாருப்பா நீங்க எல்லாம் …” பிரியா பவானி சங்கர் Exclusive

 

தொடர்புடைய இணைப்புகள்

Veetla vishesham R J balaji new prank video went viral

People looking for online information on R J balaji new prank video, RJ Balaji, Veetla Vishesham, Veetla vishesham movie will find this news story useful.