Pattamboochi

இந்த வாரம் OTT-க்களில் ரிலீசாகும் திரைப்படங்கள் & வெப்-சீரிஸ்கள்.. ஒரு பார்வை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனாக்கு பிறகான காலகட்டத்தில் ஓடிடி எனும் மீடியம் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ் பார்க்கவும், திரையரங்குகளில் படம் பார்க்கும் போது ஏற்படும் சில சிக்கல்களை தவிர்க்கவும் இந்திய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

This week OTT Release Movies Web series Netflix Aha Hotstar

Also Read | துல்கர் சல்மான் - ராஷ்மிகா நடிக்கும் சீதாராமம்.. டீசர் ரிலீஸ் எப்போ? Romantic அப்டேட்

திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடி தளங்களில் பீரிமியராக வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே போல, திரையரங்குகளில் வரும் படங்கள், குறிப்பிட்ட சில தேதிக்கு பின், பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகின்றன. அப்படி நேரடியாகவும், திரையரங்க ரிலீசுக்கு பிறகும், ஓடிடி தளங்களில், இந்த ஜூன் மாதம் 4வது வாரம் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கதிர் (2022)

சார்பட்டா பரம்பரை, ஓ மை கடவுளே படங்களில் நடித்த நடிகர் சந்தோஷ் பிரதாப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த படம் "கதிர்". இந்த படத்தில் புதுமுக கதாநாயகனாக வெங்கடேஷ் நடிக்கிறார், கதாநாயகியாக பாவ்யா நடிக்கிறார். துவாரகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குநர் தினேஷ் பழனிவேல் இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை ரஜினி சாண்டி நடித்துள்ளார். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். இந்த படம் ஆஹா தமிழ் ஒடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது.

This week OTT Release Movies Web series Netflix Aha Hotstar

மன்மத லீலா (தெலுங்கு)

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு மன்மத லீலை படத்தை இயக்கினார். மாநாடு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி முடித்துள்ளார். இதன் காரணமாகவே இந்த படத்தின் துணை டைட்டிலில் வெங்கட்பிரபு Quickie என போடப்பட்டுள்ளது. இந்த படம் வெங்கட்பிரபுவின் 10வது படமாகும்.

'மன்மத லீலை' திரைப்படத்தில் அசோக் செல்வனுடன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, பிரேம்ஜி இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு தமிழ் அழகன் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். இதுவரை வெங்கட் பிரபு படத்திற்கு, பிரவீன் கே.எல் தான் எடிட்டிங் பணிகளை மேற்கொள்வார். ஆனால், இந்த 'மன்மத லீலை' திரைப்படத்தில் வெங்கட் ராஜன் எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.

This week OTT Release Movies Web series Netflix Aha Hotstar

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியான இந்த படம் தெலுங்கு மொழியில் தற்போது, ஆஹா தெலுங்கு ஒடிடியில் இன்று (24.06.2022) வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஆஹா தமிழ் ஒடிடியில் ஏப்ரல் மாதம் தமிழில் வெளியானது.

இந்த படங்களோடு Money Heist சீசன் 1 நெட்பிளிக்ஸில் கொரிய மொழியில் வெளியாகி உள்ளது. பாரன்ஸிக் இந்தி படம் ஜி5 தளத்தில் வெளியாகி உள்ளது. குட்டாவும் சிக்ஷையும் மலையாள படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ளது. மெரி ஆவாஸ் சுனோ மலையாளப் படம் ஹாட்ஸ்டாலில் வெளியாகி உள்ளது.

Also Read | மாலத்தீவில் இன்பச்சுற்றுலா சென்ற நடிகை மம்தா மோகன்தாஸ்.. பீச்சில் நடத்திய HOT போட்டோஷூட்!

தொடர்புடைய இணைப்புகள்

This week OTT Release Movies Web series Netflix Aha Hotstar

People looking for online information on Hotstar, Netflix, OTT Release Movies, Web Series will find this news story useful.