முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகரின் மறைவுக்கு பிரபல தமிழ் நடிகர் இரங்கல்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 16, 2019 10:01 AM
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர். 57 வயதாகும் இவர், மாரடைப்பு காரணமாக நேற்று (ஆகஸ்ட் 15) ஆம் தேதி காலமானார். இவர் கடந்த 1988 முதல் 1990 வரை இந்திய அணிக்காக 7 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இவர் தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். மேலும் கிரிக்கெட் வர்ணனையாளர், இந்திய அணி தேர்வு குழு தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல நடிகர் ஆர்ஜே பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் கிரிக்கெட் வீரரும் சிறந்த மனிதநேய கொண்டவருமான விபி சந்திரசேகரின் மறைவை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
அருமையான தருணங்களை இருவரும் பகிர்ந்து கொண்டுள்ளோம். என்னால் நம்பமுடியவில்லை. அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.
Shocked to hear the loss of
Former cricketer, commentator and an amazing human being
VB Chandrashekar. Have shared some great times together. Not able to beleive. Heartfelt condolence to the family. Will miss you VB.
— RJ Balaji (@RJ_Balaji) August 15, 2019