‘ஜிகர்தண்டா’ தெலுங்கு ரீமேக் படத்தின் டீசர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான ஜிகர்தண்டா வின் தெலுங்கு ரீமேக்கின் டீசர் வெளியாகியுள்ளது.

Varun Tej-Atharvaa's Valmiki teaser is out Jigarthanda remake

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த படம் 'ஜிகர்தண்டா'. நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு திரைப்படத்தில் கதாநாயகனை விட வில்லன் கதாப்பாத்திரம் பேசப்பட்ட இந்த படத்துக்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் வரும் அசால்ட் சேது கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த பாபி சிம்ஹாவிர்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது இப்படம் தெலுங்கில் ‘வால்மீகி’ என்ற தலைப்பில் ரீமேக்காகி வருகிறது. இதில் பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் வருண் தேஜ் மற்றும் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடிகர் அதர்வாவும் நடித்துள்ளனர்.

ஹரீஷ் ஷங்கர் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு மிக்கி ஜே  மேயர் இசையமைக்கிறார். தற்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

‘ஜிகர்தண்டா’ தெலுங்கு ரீமேக் படத்தின் டீசர் இதோ வீடியோ