Fakir Other Banner USA

விஜய்யின் 'தளபதி 63' செட்ல யாரு கிரிக்கெட் விளையாடுறானு பாருங்க - வைரல் ஃபோட்டோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் படம் 'தளபதி 63'. அட்லி இயக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

Atlee and Yogi Babu playing cricket in Vijay Thalapathy 63 Set

இந்த படத்தில் நயன்தாரா , ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, விவேக், கதிர், டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் தளபதி விஜய், அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகவும், இதில் மகன் விஜய்யின் பெயர் பிகில் என்றும் எங்களுக்கு தகவல் கிடைத்தது.

மேலும் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இரண்டு விஜய்யுடம் ( அப்பா - மகன் ) ஒரே காட்சியில் தோன்றுவது படத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும், இந்த படத்தின் ஃபிளாஷ்பேக் காட்சிகள் சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டதாகவும், மேலும், ஜூலை முதல் வாரத்தில் படப்பிடிப்பிற்காக படக்குழு டெல்லி செல்லவிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் இயக்குநர் அட்லி, யோகி பாபு உள்ளிட்ட படக்குழுவினர் கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.