777 Charlie Trailer

டிவி சீரியலில் RJ பாலாஜி & ‘சூரரைப்போற்று’ ஹீரோயின்.. வெளியான ப்ரோமோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் RJ பாலாஜி, போனி கபூரின் பே வியூவ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள வீட்ல விஷேசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரோடு அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி மற்றும் மலையாள நடிகை லலிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

RJ Balaji Aparna Balamurali acted in Devayani serial

Also Read | நயன்தாராவின் O2 படத்தைத் தொடர்ந்து கார்த்தியின் படத்தில் ரித்து.. கலக்கல் ஃபோட்டோ!

இந்தியில் வெளியான பதாய் ஹோ படத்தின் ரீமேக்தான் இந்த படம் ஆகும். முன்னதாக தேசிய விருதையும் இந்தப்படம் வென்றது. இந்த படத்தில் நடித்தும் இயக்கியும் உள்ளார் பாலாஜி. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றது. இதையடுத்து படம் ஜூன் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

RJ Balaji Aparna Balamurali acted in Devayani serial

முன்னதாக பிஹைண்ட்வுட்ஸ் தளத்துடன் இணைந்து பொதுமக்களின் இல்லங்களில் நடக்கு விசேஷங்களுக்கு நடிகர் ஆர்.ஜே. பாலாஜி சென்று வந்த வீடியோக்கள் பிஹைண்ட்வுட்ஸ் இணையதளத்தில் பிரத்தியேகமாக இடம் பெற்றன. இதனைத் தொடர்ந்து தற்போது ஜீ தமிழின் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் அபர்ணா பாலமுரளி இருவரும் ஒரு காட்சியில் நடித்துள்ளனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தேவயானி, பார்வதி, நியாஸ் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வரும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

RJ Balaji Aparna Balamurali acted in Devayani serial

சுமார் 350-க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்துள்ள இந்த சீரியலில் கோலங்கள் புகழ் இணையான தேவயானி மற்றும் அபிஷேக் மீண்டும் சேர்ந்து நடிக்கின்றனர். இந்த சீரியல்படி, கணவரை இழந்த லக்‌ஷ்மி, தன் மாமானார், மகன் உள்ளிட்டோரின் ஆணாதிக்கத்தில் இருந்து விடுபட்டு சுயமாக சொந்தக்காலில் நிற்பதுடன், இன்னொருவரை திருமணம் செய்துகொண்டு தன் வாழ்க்கைக்கு புதிய அர்த்தம் தேடுவதாய் திரைக்கதை செல்கிறது.

RJ Balaji Aparna Balamurali acted in Devayani serial

இந்த சீரியலில் தான் தற்போது வீட்ல விஷேசம் படத்தின் ப்ரோமோஷனுக்காக RJ பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதில் குழந்தையுடன் இருக்கும் தேவயானியிடம் ஆர்.ஜே.பாலாஜி, அபர்ணா பாலமுரளியுடன் வந்து அமர்ந்து, தேவயானியின் கையில் இருக்கும் குழந்தையை பார்த்துவிட்டு, “நீங்களும் எங்க அம்மா மாதிரி தானா..? எங்க வீட்லயும் புதுசா ஒரு குட்டி பாப்பா வரபோகுது” என்றதும் தேவயானி அபர்ணா பாலமுரளியை பார்க்கிறார்.

RJ Balaji Aparna Balamurali acted in Devayani serial

அப்போது ஆர்.ஜே.பாலாஜி, “அவங்க இல்ல.. எங்க அம்மா தான் கர்ப்பிணியா இருக்காங்க.. பேரன் பேத்தி பெத்துக்க வேண்டிய வயசுல, அவங்களே அவங்களுக்கு சீமந்தம் பண்ணிக்க போறாங்க” என்றதும் தேவயானி பதிலுக்கு, “எங்களுக்குனு எந்த ஒரு விருப்பமும் இருக்க கூடாதுல்ல” என்று பாஜியை வெச்சு வாங்குகிறார். இந்த ப்ரோமோ தற்போது ஜீ தமிழில் வெளியாகியுள்ளது.

Also Read | "இந்த ஊர் Shootக்கு மட்டும் 4 கோடி ரூபாய்".. கார்த்தியின் 'சர்தார்' படம்.. வெளியான செம தகவல்.!

தொடர்புடைய இணைப்புகள்

RJ Balaji Aparna Balamurali acted in Devayani serial

People looking for online information on Aparna Balamurali, Devayani serial, Puthu Puthu Arthangal, RJ Balaji will find this news story useful.