777 Charlie Trailer

நயன்தாராவின் O2 படத்தைத் தொடர்ந்து கார்த்தியின் படத்தில் ரித்து.. கலக்கல் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லக்ஷ்மன் குமார் பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் ' சர்தார்'.  இதுவரை நடிகர் கார்த்தி நடித்த படங்களில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுவரும் இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா, யூகி சேது, முனீஷ்காந்த், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

after nayantharas O2 Master Rythvik in Karthi Sardar

Also Read | “அவங்க நடிப்பு ராட்சசி…” டிரைலர் பார்த்து பாராட்டிய கமல்… உற்சாகமான ‘செம்பி’ படக்குழு

இயக்குநர் P.S.மித்ரன் இயக்கும் இந்த படத்துக்கு G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பை கவனித்துக்கொள்ள, கதிர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.  திலீப் சுப்புராயன் சண்டைப்பயிற்சி அளிக்கிறார். அண்மையில் அசர்பைசான் நாட்டின் பாராளுமன்றம் உட்பட பல இடங்களிலும், ஜார்ஜியவிலும் இந்த படத்தின் வில்லனான சங்கி பாண்டேவுடனான காட்சிகள் மட்டும் 4 கோடி ரூபாய் செலவில் படமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது சர்தார் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

after nayantharas O2 Master Rythvik in Karthi Sardar

இப்படத்தில் மாஸ்டர் ரித்விக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யூடியூப் தளத்தில் விதவிதமான நகைச்சுவை வீடியோக்களில், பல கெட்டப்புகளில் நடித்து பிரபலமானவர் ரித்விக். தம்முடைய தந்தையின் இயக்கத்தில் யூடியூப் வீடியோக்களில் சின்ன சின்ன கான்செப்ட் காட்சிகளில் நடித்து வந்த ரித்விக்கின் நகைச்சுவை வீடியோக்கள் பலருக்கும் பிடித்தமானவை.

after nayantharas O2 Master Rythvik in Karthi Sardar

அண்மையில் நயன் தாராவின் நடிப்பில் வெளியான O2 பட டீசர் அனைவரையும் கவர்ந்தது. இதில் நயன்தாராவின் 8 வயது மகனாக ரித்விக் நடிக்கிறார்.  இந்த டீசர் படி, நயன் தன் மகனுடன் ஒரு பேருந்து விபத்தில் சிக்கிக்கொள்கிறார். நுரையீரல் பிரச்சனைக்காக தன் மகனிடம் எப்போதும் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை, விபத்துக்குள்ளான பேருந்தில் இருக்கும் சகபயணிகள் குறிவைக்க, அவர்களிடம் இருந்து தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் களமாக இருந்தது. பின்னர் O2 பட விழாவில் மேடையில் பேசிய ரித்விக்கின் பேச்சும் அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் கார்த்தியின் சர்தார் படத்தில் மாஸ்டர் ரித்விக், கார்த்தியுடன் நடிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

PRO - Johnson.

Also Read | "இந்த ஊர் Shootக்கு மட்டும் 4 கோடி ரூபாய்".. கார்த்தியின் 'சர்தார்' படம்.. வெளியான செம தகவல்.!

தொடர்புடைய இணைப்புகள்

after nayantharas O2 Master Rythvik in Karthi Sardar

People looking for online information on Karthi, Master Rythvik, Rithu Rocks Rythvik, Rythvik, Sardar, Sardar shoot Azerbaijan will find this news story useful.