"எப்படி அந்த படத்த தயாரிச்சீங்க?".. RJ பாலாஜி கேள்வி .. "எனக்கும் அதே டவுட்தான்" - உதய் கலகல

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெஞ்சுக்கு நீதி படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.

RJ Balaji fun speech in Udhayanithi Nenjuku Neethi meet

Also Read | இதுவும் சூப்பரா இருக்கே… சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘DON’ படத்தின் தெலுங்கு வெர்ஷன் Title.!

உதயநிதி ஸ்டாலினும் சினிமாவும்…

நடிகர் உதயநிதி ஸ்டாலின், சினிமாவில் முதலில் தயாரிப்பாளராக களமிறங்கினார். விஜய்யின் குருவி மற்றும் சூர்யா நடித்த ஆதவன் படங்களை தயாரித்த அவர், ஒரு கல் ஒரு கல் கண்ணாடி படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். இந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராகியுள்ளார்.

RJ Balaji fun speech in Udhayanithi Nenjuku Neethi meet

நெஞ்சுக்கு நீதி…

தற்போது இயக்குனர் அருண் ராஜா காமராஜா இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில்  உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ’நெஞ்சுக்கு நீதி’ படம் மே 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆர்ட்டிக்கள் 15 படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

RJ Balaji fun speech in Udhayanithi Nenjuku Neethi meet

RJ பாலாஜி பேச்சு…

இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் RJ பாலாஜி பேசியது ரசிகர்கள் முதல் மேடையில் இருந்தவர்கள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவரின் பேச்சில் “ நானும் உதயநிதியும் பல வருஷங்களுக்கு முன்னர் சினிமாவைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது அவர் நடிக்கவரவில்லை. தயாரிப்பாளராக மட்டுமே இருந்தார். அப்போது நான் அவரிடம், "ஏன் உதய்  சினிமா பத்தி இவ்ளோ பேசுறீங்களே… நீங்க எப்படி அந்த படத்த தயாரிச்சிங்க. அவ்ளோ சுமாரான படத்தை’ எனக் கேட்டேன். அதற்கு அவர் என்னிடம் ‘எனக்கும் அந்த டவுட் இருந்துச்சு… அதனால எடுத்தவர்கிட்ட போய்க் கேட்டேன்… என்ன சார் படம் சுமாரா இருக்குற மாதிரி இருக்கேன்னு… அதுக்கு அவர், "அப்படியா… அப்ப இன்னொரு வாட்டி எடுப்போம்னு சொன்னார்" எனக் கூறினார். இதைக் கேட்ட ரசிகர்கள் முதல் மேடையில் இருந்த உதயநிதி வரை அனைவரும் கலகலவென சிரித்து ரசித்தனர்.

RJ Balaji fun speech in Udhayanithi Nenjuku Neethi meet

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

"எப்படி அந்த படத்த தயாரிச்சீங்க?".. RJ பாலாஜி கேள்வி .. "எனக்கும் அதே டவுட்தான்" - உதய் கலகல வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

RJ Balaji fun speech in Udhayanithi Nenjuku Neethi meet

People looking for online information on Nenjuku Neethi Movie, RJ Balaji, RJ Balaji fun speech, Udhayanithi Nenjuku Neethi, Udhayanithi Stalin will find this news story useful.