777 Charlie Trailer

சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் T ராஜேந்தர்… சந்தித்து நலம் விசாரித்த கமல்… latest pic

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசன் நடிகர் T ராஜேந்தரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார்.

Kamalhaasan meet T Rajendar latest pic got attention

Also Read | படத்தில் நடித்த குழந்தைகள் வளர 7 வருஷம் காத்திருந்த பெண் இயக்குனர்… மீண்டும் 'ஷூட்டிங்’

மருத்துவமனையில் அனுமதி…

தமிழ் சினிமாவின் மூத்தக் கலைஞர்களில் ஒருவரான டி.ராஜேந்தர் சில வாரங்களுக்கு முன்னதாக சென்னை போருரில் உள்ள தனியார் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். அவருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த புகைப்படங்கள் வெளியாகின.

வெளிநாடு சிகிச்சை…

இதையடுத்து சில வாரங்களுக்கு முன்பு அவரது மகன் நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்ட அறிக்கையில் “எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும் வணக்கம், எனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில்  சிறிய இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல்நலன் கருதியும் உயர் சிகிச்சைக்காவும், இப்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன் நலமாக உள்ளார்.கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிராத்தனைக்கும் அனைவரின் அன்புக்கும் நன்றி” என்று கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் டி ராஜேந்தர் விரைவில் குணமாகி வரவேண்டும் என்று நம்பிக்கை வார்த்தைகளை தெரிவித்து வருகின்றனர்.

Kamalhaasan meet T Rajendar latest pic got attention

கமல் சந்திப்பு…

இதையடுத்து இன்று T ராஜேந்தர் அமெரிக்காவுக்கு செல்ல உள்ள நிலையில் மாலை 5.45 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை ஏற்பாடுகளை மேற்கொள்ள கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே நடிகர் சிம்பு அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் T ராஜேந்தரை அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள கமல் “நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே” என பதிவிட்டுள்ளார்.

Kamalhaasan meet T Rajendar latest pic got attention

Also Read | “என்ன நடிக்க விட்டீங்கன்னா 300 கோடி… வந்துட்டு இருக்கு”… ‘விக்ரம்’ வசூல் பற்றி பேசிய கமல்

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kamalhaasan meet T Rajendar latest pic got attention

People looking for online information on KAMALHAASAN, Kamalhaasan meet T Rajendar, T Rajendar, TR will find this news story useful.