www.garudabazaar.com

‘வலிமை’ தயாரிப்பாளர் படத்தில் RJ பாலாஜி.. எகிறவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரேடியோ ஜாக்கியாக இருந்து, சினிமா துறையில் வந்து அசத்தியவர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி.

Rj balaji and boney kapoor new movie first look update

மீண்டும் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த புகழ்… களைகட்டிய குக் வித் கோமாளி!

பல திரைப்படங்களில் நடித்துள்ள ஆர் ஜே பாலாஜி, 'LKG' மற்றும் 'மூக்குத்தி அம்மன்' ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

LKG படத்திற்கு கதை எழுதியிருந்த ஆர் ஜே பாலாஜி, சரவணனுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

ஹிந்தி ரீமேக்

இதனைத் தொடர்ந்து, போனி கபூர் தயாரிப்பில் புதிய தமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. அது மட்டுமில்லாமல், இந்த திரைப்படத்தையும் ஆர் ஜே பாலாஜி தான் இயக்கி வருகிறார். ஹிந்தியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற 'பதாய் கோ' படத்தின் ரீமேக் தான் இந்த திரைப்படம் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

ஹிந்தியில் வெளியான பதாய் கோ திரைப்படம், சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்திருந்தது. அது மட்டுமில்லாமல், தேசிய விருதையும் இந்த திரைப்படம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Rj balaji and boney kapoor new movie first look update

படக்குழு

ஆர் ஜே பாலாஜிக்கு ஜோடியாக சூரரைப் போற்று புகழ் அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், யோகிபாபு, ஊர்வசி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போ?

விரைவில், திரைப்படமும் வெளியாகலாம் என கூறப்பட்டு வரும் நிலையில், படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், ஒரு அசத்தல் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆர் ஜே பாலாஜி படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, இந்த படத்திற்கு 'வீட்ல விஷேசங்க' என பெயரிடப்பட்டு உள்ளதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சென்னையில் தெறிக்க விடப் போகும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி… வெளியான செம்ம அறிவிப்பு!

 

தொடர்புடைய இணைப்புகள்

Rj balaji and boney kapoor new movie first look update

People looking for online information on போனி கபூர், மூக்குத்தி அம்மன், Boney kapoor, Hindi remake, Lkg Movie, Mookuthi Amman, Nayanthara, RJ பாலாஜி, RJ Balaji, Yogi Babu will find this news story useful.