பக்காவான FAMILY ENTERTAINER.. R J பாலாஜி நடிப்பில் வெளியான 'வீட்ல விஷேசம்' பட அசத்தல் டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி வரும் 'வீட்ல விஷேசம்' படத்தின் டிரெய்லர்  வெளியாகியுள்ளது.

RJ Balaji Starring Veetla Vishesham Movie Trailer Released

R J பாலாஜி, ஹீரோவாக நடித்த LKG மற்றும் மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இவர் போனி கபூர் தயாரிப்பில் இந்தி திரைப்படமான பதாய் கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார்.

RJ Balaji Starring Veetla Vishesham Movie Trailer Released

இந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கவும் செய்கிறார். இந்த பதாய் கோ திரைப்படம் இந்தியில் 220 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படமாகும், தேசியவிருதையும் இந்தப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த ரீமேக் படத்தில் இவருக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். சத்யராஜ், ஊர்வசி, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் யோகி பாபு ஆர். ஜே பாலாஜியுடன் கௌரவத்தோற்றத்தில் நடிக்கிறார். இந்த ரீமேக் படத்திற்கு 'வீட்ல விசேஷம்' என பெயர் வைக்கப்பட்டு முதல் லுக் போஸ்டர் ரிலீசானது.

கோயமுத்தூரில் நடைபெற்ற இந்த படத்தின் படபிடிப்பு ஒரே கட்டமாக 40 நாட்கள் நடந்து முடிந்தது. ஜூன் 17 அன்று இந்த படம் உலகமெங்கும் ரிலீசாக உள்ளது. வீட்ல விசேஷம் திரைப்படத்தின் டிரைலர் இன்று (மே 25) நடந்த RCB மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் போட்டியின் துவக்கத்தின் போது இரவு 7 மணிக்கு வெளியாகி உள்ளது.

RJ Balaji Starring Veetla Vishesham Movie Trailer Released

முதிர் தம்பதியரான ஊர்வசி - சத்யராஜ் தம்பதிக்கு குழந்தை உருவாகி இருப்பதை மருத்துவர் சொல்லும் காட்சியில் டிரெய்லர் ஆரம்பித்து, இதனால் குடும்பத்தின் மூத்த பிள்ளைகளான ஆர்.ஜே. பாலாஜி & தம்பிகள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் நகைச்சுவையாக டிரெய்லரில் காட்டப்பட்டுள்ளன

பக்காவான FAMILY ENTERTAINER.. R J பாலாஜி நடிப்பில் வெளியான 'வீட்ல விஷேசம்' பட அசத்தல் டிரெய்லர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

RJ Balaji Starring Veetla Vishesham Movie Trailer Released

People looking for online information on R J Balaji, Sathya Raj, Urvashi, Veetla Vishesham will find this news story useful.