www.garudabazaar.com
iTechUS

திருச்சி ஶ்ரீ ரங்கம் கோயிலில் ரவீந்தர் & மகாலட்சுமி சாமி தரிசனம்.. வைரலாகும் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தயாரிப்பாளர் ரவீந்தர் & அவரது மனைவி மகாலட்சுமி திருச்சி ஶ்ரீ ரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

Ravindar Mahalakshmi Visit Trichy Sri Rangam Temple

Images are subject to © copyright to their respective owners.

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி ஆகியோர் கடந்தாண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த ஜோடிக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். 90 ஸ் கிட்ஸ் மத்தியில் ஆங்கராக நன்கு அறியப்பட்டவர் மகாலட்சுமி. இதன் பின்னர் சின்னத்திரை நடிகையாக வலம் வந்த அவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அன்பே வா சீரியலிலும் நடித்து வருகிறார்.

Ravindar Mahalakshmi Visit Trichy Sri Rangam TempleImages are subject to © copyright to their respective owners.

தமிழில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில், நட்புன்னா என்னன்னு தெரியுமா,முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். ரவீந்தர் சந்திரசேகரன், கூர்கா, சஙகத்தமிழன் ஆகிய படங்களை வினியோகம் செய்துள்ளார். தற்போது காதல் கண்டிசன் அப்ளே என்ற படத்தையும் வினியோகம் செய்ய உள்ளார்.

ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் குறித்து Behindwoods-ல் தனது பார்வையை முன் வைக்கும் நிகழ்ச்சி ஒன்றையும் ரவீந்திர் வழங்கி வருகிறார். மேலும், Fatman என்ற அடையாளத்தால் அறியப்படும் ரவீந்தர், இந்த பெயர் மூலம் மக்கள் மத்தியிலும் மிகப் பிரபலமானவர்.

Ravindar Mahalakshmi Visit Trichy Sri Rangam Temple

Images are subject to © copyright to their respective owners.

திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ரவீந்தர். சமீபத்தில் தனது மனைவியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

Ravindar Mahalakshmi Visit Trichy Sri Rangam TempleImages are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், நடிகை மகாலட்சுமி தனது கணவருடன் திருச்சி ஶ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கோயில் யானையிடம் ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகாலட்சுமி பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Ravindar Mahalakshmi Visit Trichy Sri Rangam Temple

People looking for online information on Mahalakshmi, Ravinder will find this news story useful.