www.garudabazaar.com

"நீங்களும் தான்..".. Photo பகிர்ந்து கணவர் ரவீந்தர் குறித்து மகாலட்சுமி Viral Post 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தயாரிப்பாளர் ரவீந்தர்  குறித்து அவரது மனைவி மகாலட்சுமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Mahalakshmi about Her Husband Ravinder Chandrasekhar

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி ஆகியோர் சமீபத்தில் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.

Mahalakshmi about Her Husband Ravinder Chandrasekhar

இந்த ஜோடிக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். 90 ஸ் கிட்ஸ் மத்தியில் ஆங்கராக நன்கு அறியப்பட்டவர் மகாலட்சுமி. இதன் பின்னர் சின்னத்திரை நடிகையாக வலம் வந்த அவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அன்பே வா சீரியலிலும் நடித்து வருகிறார்.

Mahalakshmi about Her Husband Ravinder Chandrasekhar

தமிழில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில், நட்புன்னா என்னன்னு தெரியுமா,முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். ரவீந்தர் சந்திரசேகரன், கூர்கா, சஙகத்தமிழன் ஆகிய படங்களை வினியோகம் செய்துள்ளார்.

ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் குறித்து Behindwoods-ல் தனது பார்வையை முன் வைக்கும் நிகழ்ச்சி ஒன்றையும் ரவீந்திர் வழங்கி வருகிறார். மேலும், Fatman என்ற அடையாளத்தால் அறியப்படும் ரவீந்தர், இந்த பெயர் மூலம் மக்கள் மத்தியிலும் மிகப் பிரபலமானவர்.

Mahalakshmi about Her Husband Ravinder Chandrasekhar

திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ரவீந்தர். சமீபத்தில் தனது திருமணத்தின் 100வது நாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார். இந்நிலையில், நடிகை மகாலட்சுமி தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "வாழ்க்கை அழகாக இருக்கிறது, நீங்களும் அப்படித்தான்" என கணவர் குறித்து மகாலட்சுமி பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Mahalakshmi about Her Husband Ravinder Chandrasekhar

People looking for online information on Mahalakshmi, Ravinder will find this news story useful.