www.garudabazaar.com
iTechUS

"மூளை மாற்று அறுவை சிகிச்சை".. பிச்சைக்காரன்- 2 படத்தின் மிரட்டும் SNEEK PEEK வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் ஆண்டனி, நடிக்கும் பிச்சைக்காரன்- 2 படத்தின் SNEEK PEEK டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Pichaikaran 2 Movie SNEEK PEEK Trailer Released

Images are subject to © copyright to their respective owners.

Also Read | வாரிசு படத்தின் 300 கோடி வசூல் சாத்தியமா?.. பத்திரிகையாளர் செய்யாறு பாலு EXCLUSIVE தகவல்!

நடிகர் விஜய் ஆண்டனி முன்னணி இசையமைப்பாளராக இருந்து பிரபல நடிகராக மாறியவர். 2016ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான 'பிச்சைக்காரன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் மிகப் பெரிய வெற்றி பெற்றது. மேலும் ஒடியா, மராத்தி, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிச்சைக்காரன்-2 திரைப்படம் தெலுங்கில் பிச்சஃகாடு-2 என்று பெயரிடப்பட்டுள்ளது. 

Pichaikaran 2 Movie SNEEK PEEK Trailer Released

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தை விஜய் ஆண்டனியின் சொந்த நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமம் & டிஜிட்டல் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Pichaikaran 2 Movie SNEEK PEEK Trailer Released

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இந்த படத்தின் SNEEK PEEK டிரெய்லர் வெளியாகி உள்ளது. Money is Injurious to Health என்ற வாசகத்துடன் இந்த வீடியோ வெளியாகி உள்ளது. படத்தின் முதல் 3:45 நிமிட காட்சிகள் இந்த வீடியோவில் அமைந்துள்ளன. மூளை மாற்று அறுவை சிகிச்சை என்ற கான்செப்ட்டை மையமாக வைத்து இந்த வீடியோ அமைந்துள்ளது. மூளை மாற்று அறுவை சிகிச்சையின் நன்மை & தீமை குறித்த விவாதமும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

இந்த படம் வரும் 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | துணிவு படத்தில் இடம்பெறாத தீம்.. தெறிக்கவிடும் முழு OST இசைத்தொகுப்பு! ஜிப்ரான் சம்பவம் 💥

தொடர்புடைய இணைப்புகள்

Pichaikaran 2 Movie SNEEK PEEK Trailer Released

People looking for online information on Pichaikaaran2, Pichaikaran 2 Movie SNEEK PEEK Trailer, Vijay Antony will find this news story useful.