"மகாலட்சுமிக்கு மட்டும் இது 2வது திருமணம் இல்ல".. தயாரிப்பாளர் ரவீந்தர் Exclusive.!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி ஆகியோர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
திருப்பதியில் வைத்து இவர்களின் திருமணம் நடைபெற்றிருந்த நிலையில், இது தொடர்பான புகைப்படங்களையும் அவர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தனர். ஏராளமானோர் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஆகியோர், ஜோடியாக Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளனர்.
தங்களின் திருமணம் பற்றி பேசிய ரவீந்தர், "கடந்த சில தினங்களாகவே எங்களின் திருமணம் பற்றி தான் நிறைய பேர் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, பலரும் மகாலட்சுமி தான் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக பேசி கொள்கிறார்கள். ஆனால், எனக்கே இது இரண்டாவது திருமணம் தான். பல பேருக்கு எனக்கு திருமணம் ஆன விஷயமே தெரியாது.
ஒன்றரை ஆண்டுகளாகவே ரவீந்தர் - மகாலட்சுமி திருமணம் தொடர்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அந்த சமயத்தில் நடந்ததை நினைவு கூர்ந்த ரவீந்தர், "நான் அவரிடம், நிறைய நேரம் எடுத்துக் கொண்டு யோசித்து சொல்லுங்கள். நான் உடம்பை குறைத்துக்க கொண்டு வந்து உங்களை திருமணம் செய்கிறேன் என கூறினேன். ஆனால், மகாலட்சுமியோ அது நடக்காது என கூறி விட்டார். இப்படி இருப்பதே அவருக்கு விருப்பமாக தான் இருந்தது" என்றார்.
தொடர்ந்து, இந்த திருமணம் காரணமாக மகாலட்சுமி பற்றி எழுந்த விமர்சனங்கள் பற்றி பேசிய ரவீந்தர், "பணத்துக்காக தான் திருமணம் செய்து கொண்டதாக சிலர் குறிப்பிட்டனர். அதே போல, எங்களை Troll செய்த பதிவுகளில், மகாலட்சுமிக்கு இரண்டாவது திருமணம் என்று தான் குறிப்பிட்டார்கள். இருவருக்கும் இரண்டாவது திருமணம் என யாருமே சொல்லவில்லை. அவர்களுக்கு அது தான் தேவை. கோபத்தில் முடிவு எடுத்த மகாலட்சுமி என்றெல்லாம் போட்டிருந்தார்கள்" என்றார்.
மேலும், தங்களின் திருமணம் குறித்த விமர்சனங்கள் மற்றும் எதிரான கருத்துக்களை பார்க்கும் போது, ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற விஷயம் தான் அதிகமாக தோன்றுவதாக ரவீந்தர் குறிப்பிட்டிருந்தார். மேலும் விமர்சனத்தை அவர்கள் எதிர்கொள்வது பற்றியும், கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அதே போல, தங்களின் சாதாரண திருமணத்தை Pan India திருமணமாக மாற்றி விட்டார்கள் என்றும் ரவீந்தர் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பான முழு வீடியோவைக் காண:
"மகாலட்சுமிக்கு மட்டும் இது 2வது திருமணம் இல்ல".. தயாரிப்பாளர் ரவீந்தர் EXCLUSIVE.! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Ravindar Comment On His Wife Mahalakshmi Insta Post
- Producer Ravindar Serial Actress Vj Mahalakshmi Marriage
- Aadhi Nikki Galrani 100 Days Of Marriage Celebration At Paris Eiffel Tower
- Andrea Jeremiah Sister Nadia Marriage Photos
- BB Jodigal 2 Amir Pavani Marriage New Promo Viral
- Ttf Vasan Explains Up About His Marriage After Viral Video
- Celebrities Picture From Vignesh Shivan Nayanthara Marriage
- Koffee With Karan Samantha About Unhappy Marriages KGF And K3G
- Nayanthara First Film Shoot Jawaan After Marriage
- Nayanthara Resumes Movie Shoot Post Marriage Update
- Vignesh Shivan Nayanthara Visiting Thailand First Time After Marriage
- Vignesh Shivan Nayanthara Visiting Kerala After Marriage
தொடர்புடைய இணைப்புகள்
- "உனக்காக இருப்பேன் அம்மு" VJ மஹாலட்சுமி கால் பாதம் பிடித்து மெட்டி போட்ட FAT MAN..!😍
- "புருஷா, உன்னால தான் என் வாழ்க்கை அழகா மாறியிருக்கு"... Fatman உடன் Honeymoon-ல் Mahalakshmi 💞
- தங்கமான மனைவி MAHALAKSHMI-ய தங்கத்தால் அலங்கரித்து அழகு பார்த்த RAVINDRAN 😍
- കല്യാണവീട്ടിലേക്ക് അപ്രതീക്ഷിതമായി എത്തിയ കരടി . പായസവും ചായയും കുടിച്ച് നൈസായി പോയപ്പോൾ !!
- FAT MAN Ravindran, VJ Mahalakshmi-க்கு திடீர் கல்யாணம் 😍 Love You Ammu
- "உன் கூட 100 வருஷம் வாழனும்" 2 கால்களை இழந்த காதலனை கைவிடாது மணந்த காதலி..! 100% True Love
- സിസ്റ്റർ ലിനിയുടെ ഭർത്താവ് സജീഷിന് ആശംസകൾ നേർന്ന് ശൈലജ ടീച്ചറും വീണ ജോർജും
- ക്ഷമ ബിന്ദുവിന് പിന്നാലെ സ്വയം വിവാഹം ചെയ്ത് സീരിയൽ താരം കനിഷ്ക
- Nazriya, Fahadh-அ கல்யாணம் பண்ண அப்புறம் Life இப்படி தான் போகுது 😍 Couple Goals 🥰
- Mass ആയി കതിർ മണ്ഡപത്തിലേക്ക് ബുള്ളറ്റ് ഓടിച്ച് വരുന്ന നവ വധു
- 'Yuzvendra Chahal - Dhanashree விவகாரத்து முடிவா?'Insta Story ஆல் பரபரப்பு!Chahal உருக்கம்!.Divorce
- വിവാഹപ്പന്തലില് നിന്നൊരു ചിരിദൃശ്യം