www.garudabazaar.com

முத்து பட ஸ்டைலில் ரவீந்தர் போட்ட போஸ்ட்.. என்னவா இருக்கும்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தயாரிப்பாளரும், பிக்பாஸ் விமர்சகருமான ரவீந்தர் சந்திர சேகரன் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்ட போஸ்ட் வைரலாக பரவி வருகிறது.

Ravindar aka Fatman Crazy post on Diwali prize goes viral

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வந்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். குறிப்பாக Behindwoods-ல் பிக்பாஸ் குறித்த தமது பார்வையை முன்வைக்கும் நிகழ்ச்சியை வழங்கிவந்த ரவீந்தர், FATMAN என்கிற அடையாளத்தால் இணையவழி நிகழ்ச்சிகளில் அறியப்படுவர். கடைசியாக ரவீந்தர் தயாரிப்பில் சாந்தனு பாக்கியராஜ், அதுல்யா ரவி நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில்தான் அண்மையில் ரவீந்தர், மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டார்.

தீபாவளி

வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 24 ஆம் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு ஆடைகள் வாங்குவது, பட்டாசு விற்பனை என தமிழகமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில், ரவீந்தர் சந்திரசேகரன் தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதிலுள்ள புகைப்படத்தில்,"ராத்திரி 10 மணிக்கு தோட்டத்தில் என்னை தனிமையில் சந்திக்கவும். தீபாவளி பரிசு காத்திருக்கிறது" என எழுதியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, சரத் பாபு, ராதாரவி, செந்தில், வடிவேலு ஆகியோர் நடித்து கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான படம் முத்து. கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில், இந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் ரவீந்தர் இந்த புகைப்படத்தை பகிர்ந்து,"வர மறந்துவிடாதீர்கள்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த போஸ்ட் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருவதுடன், பரிசு என்னவா இருக்கும்? எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். மேலும், சிலர் ரவீந்தருக்கு அண்மையில் திருமணமானதை குறிப்பிட்டு, தல தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Ravindar aka Fatman Crazy post on Diwali prize goes viral

People looking for online information on Diwali, Fatman, Gift, Ravindar Chandrasekaran will find this news story useful.