www.garudabazaar.com

"வீரனுக்கு சிறைச்சாலை ஒரு பூஞ்சோலை டா".. Jailல இருந்துட்டு அசீம் பேசிய mass பஞ்ச்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொம்மை டாஸ்க் ஒன்றின் காரணமாக ஏராளமான பிரச்சனைகள் உருவாகி இருந்தது.

Azeem dialogue while inside prison in biggboss 6 tamil

இதனால் கடந்த சில தினங்களாகவே ரணகளமாக தான் பிக்பாஸ் வீடும் இயங்கி வருகிறது. அப்படி ஒரு சூழலில் தற்போது பிக்பாஸ் வீடு வழக்கம் போல சற்று கலகலப்பாகவும் இருந்து வருகிறது.

முன்னதாக, ஷெரினாவுக்கு காயம் ஏற்பட்ட பின்னர் அடுத்தடுத்து ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டே தான் இருந்தனர். ஆரம்பத்தில் மணிகண்டன் கோபம் அடைய, இதன் பின்னர் டாஸ்க்கில் ஏற்பட்ட மோதலால் அசீம், தனலட்சுமி, அமுதவாணன், விக்ரமன் உள்ளிட்ட பல போட்டியாளர்களிடையே மாறி மாறி விவாதங்கள் தான் நடந்து வந்தது. இதனால் வார இறுதியில் கமல் வரும் போது உண்மை என்ன என்பது தெரிய வரும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதற்கு மத்தியில், Luxury Budget டாஸ்க்கும் நடைபெற்று வந்தது. இதிலும், மணிகண்டன், ஜனனி, ரச்சிதா, நிவா, தனலட்சுமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர். தற்போது பொம்மை டாஸ்க்கும் முடிவுக்கு வந்ததாக தெரியும் நிலையில், ஷிவின் மற்றும் அசீம் ஆகியோரை 'Worst Performer' மற்றும் சிறப்பாக பங்கெடுக்காத நபர் என்றும் கூறி சிறை செல்லும் படி பிக்பாஸ் தெரிவிக்கிறார்.

Azeem dialogue while inside prison in biggboss 6 tamil

இதனைத் தொடர்ந்து, உள்ளே  சிறை உடை அணிந்து முதல் ஆளாக அசீம் சென்றார். பின்னர் ஷிவின் செல்ல, "வெல்கம் டூ சிறைச்சாலை. அமருங்கள்" என அசீம் கூறுகிறார். ஷிவின் உள்ளே சென்றதும் குயின்ஸி சிறைக் கதவை பூட்டவும் செய்கிறார். இதனையடுத்து ஆல் தி பெஸ்ட் என்றும் குயின்ஸி சொல்ல, ஸ்நாக்ஸ் எடுத்தீர்களா என்றும் விக்ரமன் கேட்கிறார்.

Azeem dialogue while inside prison in biggboss 6 tamil

"ஸ்நாக்ஸா, சோறே உள்ள இல்ல" என ஒரு போட்டியாளர் ஜாலியாக கூற, அதற்கு அசீம் சொன்ன பதில் அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளது. "வீரனுக்கு சிறைச்சாலை ஒரு பூஞ்சோலை டா" என வேடிக்கையாக அசீம் கூறியதும் மைனா நந்தினி, நிவா, ADK, ராம் உள்ளிட்டோர் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Azeem dialogue while inside prison in biggboss 6 tamil

People looking for online information on Azeem, BB6 Tamil, BIGGBOSS TAMIL, Jail will find this news story useful.