www.garudabazaar.com

திடீரென தீ விபத்துக்குள்ளான நடிகை கனகா வீடு.! என்ன நடந்தது? முழு தகவல்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கரகாட்டக்காரன் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை கனகா.

80S Actress kanaka house fire accident Chennai

Also Read | சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் குக் வித் கோமாளி புகழ் & சக்தி.. வைரல் வீடியோ

தமிழில் ராமராஜன் முதல் ரஜினிகாந்த் வரை முன்னணி நடிகர்களுடன் நடித்த கனகா, 80-90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். பல வருடங்களாக சினிமாவில் ஆக்டிவாக இல்லாமல் இருந்துவரும் நடிகை கனகா, கடந்த வருடம் வெளியிட்ட வீடியோவில், ஒரு வேளை, தான் மீண்டும் நடிக்க வந்தால் ஒப்பனை முதல் ஹேர்ஸ்டைல் வரை இன்றைக்கு இருப்பதற்கு தகுந்தாற்போல் பல விஷயங்களை புதிதாக கற்றுக் கொள்ள வேண்டியது இருக்கிறது என்றும், அவற்றை தான் கற்க தயார் என்றும், இதேபோல் கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்கு பகிரவும் தயார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் “நான் நடிக்க வேண்டும் என்பதற்காக இப்படி பேசி பப்ளிசிட்டி பண்ண எண்ணி வீடியோ திவிடவில்லை.” என்றும் குறிப்பிட்டிருந்தார்.  இந்நிலையில் இவரது வீட்டில் தீப்பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை ஆர்.ஏ புரம் பகுதியில் உள்ள நடிகை கனகா இல்லத்தில்தான் இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்ததுமே, இது தொடர்பாக மயிலாப்பூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

80S Actress kanaka house fire accident Chennai

இதனை அடுத்து , தீயணைப்புத் துறையினர் சென்று உடனடியாக தீயை அணைத்து இருக்கிறார்கள். இந்த தீ விபத்தானது பூஜை அறையில் இருந்து தீ பற்றியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.  யாருக்கும் எந்த விதமான பாதிப்பு இல்லை என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read |  மருத்துவமனையில் நடிகர் எஸ்வி சேகர்.. ஆயில் மசாஜால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு.. முழு தகவல்!

80S Actress kanaka house fire accident Chennai

People looking for online information on 80S actress, 90S, Kanaka will find this news story useful.