ஜிம் இல்லன்னா என்ன.. அந்த கட்டில தூக்கி போடு..! சிவகார்த்திகேயன் ஹீரோயின் வொர்க் அவுட் ப்ளான்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புதிய வகையிலான வொர்க் அவுட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங்கின் புதிய வொர்க் அவுட் | rakul preet singh's new work out method over gym shut down due to corona virus

தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இவர் ரசிகர்களை கவர்ந்தார். அண்மையில் என்.ஜி.கே படத்தில் இவரது வானதி கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் தற்போது கமல் நடிக்கும் இந்தியன்-2 படத்திலும், சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் வொர்க் அவுட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், 'வீட்டில் இருக்கும் ஃபர்னிச்சர்களும் சிறந்த ஜிம் சாதனங்கள் தான். self quarantine உங்களின் வளர்ச்சியை கெடுக்க அனுமதிக்க வேண்டும்' என அவர் பதிவிட்டுள்ளார். கட்டில் மேல் யோகா போஸில் அவர் செய்யும் உடற்பயிற்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Entertainment sub editor