"அந்த தமிழ் நடிகரைப் பார்க்க, இந்தியா வருவேன்" - பிரபல சிறுவன் குவாடன் ஆசை...வைரலாகும் செய்தி!
முகப்பு > சினிமா செய்திகள்கொஞ்சம் நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்ககளில் பரவலாக பேசப்பட்ட பெயர் குவாடன். Dwarfism என்னும் வளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்ட இந்தச் சிறுவன் பள்ளியில் மற்ற மாணவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளானான். இதனால் மனம் உடைந்து போன அவன், நான் சாகப்போகிறேன் என்று பிஞ்சு குரலில் அழுதது உலகத்தையே உலுக்கியது.

அந்த வீடியோவை பார்த்த பலரும் அவனுக்கு ஆறுதல் கொடுத்தனர். பலரும் கொடுத்த அறிதலின் பேரில் சிறுவன் குவாடன் மனம் தேறி மீண்டு வந்தான். இந்நிலையில் அவன் நமது தமிழ் சினிமா நடிகர் ஒருவரை பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து உள்ளான். அவர் வேறு யாரும் இல்லை ஜீவாவுடன் டிஷ்யும் படத்தில் நடித்த 'கின்னஸ்' பக்ரு என்ற நடிகர் தான். இவர் முழு நீள படத்தில் நடித்த உயரம் குறைந்த மனிதர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் காவலன், ஏழாம் அறிவு, ஆற்புத தீவு மேலும் மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் அந்தச் சம்பவத்தின் பொது குவாடானுக்கு ஆறுதல் சொல்லி விடீயோ பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ குவாடானுக்கு மிகப் பெரிய நம்பிக்கை அளித்ததாகவும், குவாடனும் அதே போல் ஒரு நடிகர் ஆக வேண்டும் என்றும், இந்தியா வரும்போது கண்டிப்பாக அவரை பார்க்க வேண்டும் என்று சிறுவனின் தாய் கூறியுள்ளார்.