'மதுபானம் வாங்கி சென்றாரா ரகுல் ப்ரீத் சிங்.?!' - வைரல் வீடியோவுக்கு நடிகை பளார் ரிப்ளை.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், வைரலாகி வந்த அவரது வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

போலி வீடியோவுக்கு ரகுல் ப்ரீத் சிங் கொடுத்த ரிப்ளை | ngk actress rakul preet singh gives reply for her recent video

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கார்த்தி, சூர்யா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கிய இவர், தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் சாலையை க்ராஸ் செய்யும் புதிய வீடியோ இணையத்தில் வெளியானது. அவர் மதுபானக்கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி செல்வதாக சமூக வலைதளங்களில் கூறப்பட்டது. இதையடுத்து ரகுல் ப்ரீத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ குறித்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், ''வாவ்.., மெடிக்கல் ஷாப்பில் மதுபானங்கள் விற்கிறார்கள் என்பதை நான் இதுவரையிலும் அறிந்ததில்லை'' என நச் ரிப்ளை கொடுத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங்கின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் லைக்ஸ் குவிந்து வருகிறது. 

 

Entertainment sub editor