RIP : கொரோனா தொடரும் சோகம்... பிரபல பாடகர் மரணம் அடைந்தார்... இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகின் பல பகுதிகளிலும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்கள்   வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர்.

கொரோனா தொடரும் சோகம் பிரபல பாடகர் மரணம் அடைந்தார்Popualr singer dies due to corona virus at the age of 52

இந்த கொடூர நோயினால் பல பிரபலங்களும், கலைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலரது இறப்பு செய்திகள் ரசிகர்களின் மனதை உலுக்கி விடுகிறது. அப்படி ஒரு செய்தி தான் இது. புகழ்பெற்ற  பாடகராகிய டிராய் ஸ்னீட் தற்போது மரணம் அடைந்துள்ளார். தனது பக்தி பாடல்களுக்காக 'கிராமி' விருதுக்கு பரிந்துரைப்பட்டவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. மனைவி மற்றும் 4 பிள்ளைகளுடன் வசித்து வந்த அவர் 52-ஆம் வயதில் இறந்துள்ளார்.

இந்த செய்தியை பகிர்ந்த அவரது நண்பர் "என்னால் இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. தாங்கி  கொள்ளவும் முடியவில்லை. இந்த கொரோனா என்னை கொள்ளுகிறது. அவரது குடும்பத்திற்காக வேண்டுதல் செய்யுங்கள்" என்று கூறியுள்ளார்.

Entertainment sub editor