ரஜினி, கமல், விஜய், அஜித்... ஒரே பால்ல 4 விக்கெட்.! : இதுதான் இந்த ஐபிஎல்லில் ஹர்பஜனின் ப்ளான்.
முகப்பு > சினிமா செய்திகள்கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பதிவிட்ட ட்வீட், தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங். இந்திய அணியில் விளையாடிய இவர், ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார். ட்விட்டரில் இவரது கணக்கில் இருந்து பதிவிடப்படும் தமிழ் ட்வீட்டுக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை இவர் வைத்துள்ளார். மேலும் இவர் டிக்கிலோனா, ஃப்ரென்ட்ஷிப் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில் சென்னை வந்து அவர் தனது ட்விட்டரில் பதிவிட்ட கருத்துக்கு ரசிகர்கள் லைக்ஸ் குவிந்து வருகிறது. இதுகுறித்த தனது பதிவில், ' வந்து இறங்கியிருக்குற இடம் சென்னை. இந்த ஐபிஎல்லில் நம்ம டீம் செம வலிமை மாப்பி. தளபதி ஸ்டைல்ல தல எத்தனை டீமுக்கு குட்டி ஸ்டோரி சொல்லப் போறாருனு தெர்ல, அண்ணாத்தைய பார்த்து ஆட முடியுமான்னு கேள்வி, செய்கை வேற ரகமா இருக்க போது, சேபாக் நம்ம தலைவன் இருக்கிறான் மயங்காதே' என ட்விட்டியுள்ளார். ரஜினி, கமல், அஜித், விஜய் என அனைத்து நட்சத்திரங்களையும் வைத்து அவர் போட்ட ட்வீட் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
வந்து இறங்கியிருக்குற இடம் @ChennaiIPL.இந்த @IPL நம்ம டீம் செம #வலிமை மாப்பி.#தளபதி ஸ்டைல் ல #தல எத்தனை டீமுக்கு குட்டி ஸ்டோரி சொல்லப்போறாருனு தெர்ல.#அண்ணாத்தை பார்த்து ஆட முடியுமான்னு கேள்வி செயக்கை வேற ரகமா இருக்கபோது.சேபாக் நம் #தலைவன்இருக்கிறான் மயங்காதே #WhistlePodu #CSK pic.twitter.com/FQXJoBSw65
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 9, 2020