“இன்றே வெளியே போகலாம்..”- பிக் பாஸ் வீட்டில் கவின் எடுத்த அதிரடி முடிவு
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 25, 2019 03:32 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் பிக் பாஸ் பிரபலங்கள் இந்த வாரம் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து சேரன் வெளியேறியதையடுத்து, ஐவர் கூட்டணி இறுதிச்சுற்றுக்கு தீவிரமாக போட்டியிட்டு வருகின்றனர். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பிக் பாஸ் 2வது சீசன் போட்டியாளர்களான மகத் மற்றும் யாஷிகா, பிக் பாஸின் அறிவுரையின் பேரில் சில டாஸ்குகளை கொடுத்தனர். அதையடுத்து, இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் பிக் பாஸ் சீசன் 2-வின் டைட்டில் வின்னரான ரித்விகாவும், மற்றொரு போட்டியாளரான ஜனனி ஐயரும் எண்ட்ரி கொடுத்தனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், ரூ 5 லட்சம் கொடுத்து இதை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு செல்பவர்கள் செல்லலாம் என்கிறார் பிக் பாஸ் .உடனே கவின் நானே செல்கின்றேன் என்கிறார். சாண்டி, லாஸ்லியா உள்ளிட்டோர் கவினிடம் வெளியே செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர்.
#Day94 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/MBbepWpIJD
— Vijay Television (@vijaytelevision) September 25, 2019
“இன்றே வெளியே போகலாம்..”- பிக் பாஸ் வீட்டில் கவின் எடுத்த அதிரடி முடிவு வீடியோ