’தலைவர் 168’ திரைப்படத்தில் நயன்தாரா இணைந்ததை அடுத்து ஷூட்டில் ஒரு Change!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தர்பார் படத்தை தொடர்ந்த் ரஜினி நடிக்கும் பெயர் சூட்டப்படாத படம் 'தலைவர் 168' என குறிப்பிடப்பட்டு வருகிறது. சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் ரஜினியும் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, சதீஷ் ஆகியோர் நடித்து வந்தனர்.

Rajinikanth Thalaivar 168 siruthai siva nayanthara new shooting update

இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரிக்க, டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்று கடந்த வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. ஏற்கெனவே இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராகோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று முடிவடைந்திருந்தது.

இந்நிலையில் படத்தின் ரெண்டாவது ஷெட்யூல் பிப்ரவரி 6ம் தேதி தொடங்க உள்ளது என எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தோடர்ந்து பிப்ரவரி 4ம் தேதி இரவு படக்குழுவினர் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட உள்ளனர்.

Entertainment sub editor