ரஜினியின் ’மரண மாஸ்’ பாடல் –’சர்வதேச நிகழ்ச்சி ஜட்ஜுகளையே அலற வுட்ட Performance!’
முகப்பு > சினிமா செய்திகள்ரஜினி ஸ்க்ரீனில் வந்தாலே சிறுசு பெருசு எல்லாருக்குமே உள்ளுற பாசிட்டிவ் எனர்ஜி கொப்பளிக்கும். ’பேட்ட’ படத்தில் ரஜினியின் இளமையான தோற்றமும் நடிப்பும் பலரால் விதந்து பேசப்பட்டது. அந்த படத்தில் அனிருத் இசையில் உருவான ’மரண மாஸ்’ பாடல் ரஜினி ஸ்டைலுக்கு கூடுதல் மாஸ் சேர்த்தது.

இந்த பாடல் தற்போது சர்வதேச அரங்கில் தூள் கிளப்பியுள்ளது. America's got Talent நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ஆடியன்ஸ் இருக்கின்றனர். உலக உருண்டையில் எந்த புள்ளியில் இருந்தாலும் சரி இங்கு தங்கள் தனித்துவ திறமையை காட்டி உலக வெளிச்சத்தை அடையலாம்.
மும்பையைச் சேர்ந்த V.Unbeatable என்ற நடனக்குழு இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது. ஒரு சைக்கிளை வைத்துக்கொண்டு இவர்கள் தலைவரின் ‘மரண மாஸ்’ பாடலுக்கு வேற லெவர் பெர்ஃபார்மென்ஸ் கொடுத்துள்ளனர்.
Crouching Tiger, Hidden Dragon படத்தில் வருவது போல, ஒரு சிறுவன் காற்றில் பறந்து, சீட்டுக்கட்டு கோபுரம் போல் குவிந்து நின்றவர்கள் உச்சியில் பிடித்ததிருந்த சைக்கிள் மீது அசால்டாக மர்ந்து ஜட்ஜுகளை மெய் சிலிர்க்க வைத்தனர்.