www.garudabazaar.com

Bigboss6 Tamil : "நாங்க நண்டு பொரிக்கிறதா இல்லையான்னு discussion-ல இருக்கோம்".. டக்குனு சொன்ன GP முத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் வேறு விவாதத்தில் இருந்தபோது, நாளைக்கு சமைப்பதை குறித்து பேசிக்கொண்டிருப்பதாக கூறி அங்கிருந்து லாவகமாக தப்பிச் செல்கிறார் GP முத்து.

Bigboss6 Tamil GP Muthu discussion about food making

Also Read | Biggboss 6 Tamil : "ரீல்ஸ் இல்லையாம்.. வராமலே இருந்திருப்பேன்".. தனியே சென்று தனலட்சுமி கதறல்..

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

பிக்பாஸ் வீட்டுக்குள் ஆயிஷாவுடன் பேசிக்கொண்டிருந்த GP முத்து, நாய் குறைக்கும் சத்தத்தை கேட்டு அப்படியே அதிர்ந்துபோகிறார். மேலும், தனக்கு நாய்கள் என்றால் எப்போதுமே பயம் என தனக்கென உரித்தான பாணியில் சொல்கிறார்.

Bigboss6 Tamil GP Muthu discussion about food making

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

இந்த சீசனில் யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Bigboss6 Tamil GP Muthu discussion about food making

பிக்பாஸ் வீட்டுக்குள் ஜாலியாக வலம்வரும் GP முத்து, தன்னுடைய வெள்ளேந்தியான குணத்தால் சக போட்டியாளர்களிடம் ஈர்க்கப்பட்டுள்ளார் என்றே சொல்லவேண்டும். அந்த வகையில் கார்டன் பகுதியில் போட்டியாளர்கள் அமர்ந்திருக்கின்றனர். அப்போது. அங்கே வரும் விக்ரமன், ஒரு விஷயத்தை பற்றி பேச துவங்குகிறார். அப்போது அங்கு அமர்ந்திருந்த GP முத்து, "அய்யோ, அதெல்லாம் வேண்டாம். நாளைக்கு மீன் பொரிக்கிறதா, நண்டு பொரிக்கிறதான்னு டிஸ்கஷன்ல நாங்க இருக்கோம்".. எனக்கூறியபடி உள்ளே செல்கிறார். வேகவேகமாக அவர் நடந்து செல்ல, "எங்க போனாலும் நாங்களும் வருவோம்" என அமுதவாணனும், விக்ரமனும் அவர் பின் செல்கின்றனர்.

 

Also Read | PS1: வெளியான 'சோழா சோழா' பாடல் வீடியோ.. விக்ரமின் தெறி மாஸ் PERFORMANCE!

தொடர்புடைய இணைப்புகள்

Bigboss6 Tamil GP Muthu discussion about food making

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, GP MUTHU, Vijay tv will find this news story useful.