Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... திருப்பதியில் தரிசனம் .. பிரம்மோற்சவத்தில் கலந்து கொண்ட வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Aishwarya Rajinikanth visited Tirupati Balaji Temple brahmotsavam 2022

Also Read | ராமர் பிறந்த அயோத்தியில் ‘பாகுபலி’ பிரபாஸின் 'ஆதி புருஷ்' .. பிரம்மாண்ட டீசர் வெளியீடு.!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் தமிழ் சினிமாவின் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  தனுஷ் நடிப்பில் 3, கௌதம் கார்த்தி நடிப்பில் வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களை  இயக்கியவர்.

Aishwarya Rajinikanth visited Tirupati Balaji Temple brahmotsavam 2022

அண்மையில் அதிக வருமான வரி செலுத்துவதற்காக, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மாநில சார்பில் வழங்கப்பட்ட கௌரவ சான்றிதழை, தமது தந்தை சார்பில் சென்று பெற்றுக்கொண்ட ஐஸ்வர்யா, பெருமையான மகளாக உணர்ந்ததாகவும் அப்போது தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கிய முசாபிர் ஆல்பம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Aishwarya Rajinikanth visited Tirupati Balaji Temple brahmotsavam 2022

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  ஒவ்வொரு வருடமும் பிரம்மோற்சவம் நடக்கும் புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டவர். இந்த வருட பிரம்மோற்சவம் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி வரை நடக்கிறது.

Aishwarya Rajinikanth visited Tirupati Balaji Temple brahmotsavam 2022

இதனை முன்னிட்டு இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.  ஏழுமலையானை தரிசித்த பின் ரங்கநாயக மண்டபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.  பிரம்மோற்சவத்தில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மோகினி அவதார வாகன சேவையில் கலந்து கொணடு சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.'

Also Read | தியேட்டரில் பட்டையை கிளப்பிய பொன்னியின் செல்வன்.. PS1 படத்தின் மூன்று நாள் வசூல் நிலவரம்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... திருப்பதியில் தரிசனம் .. பிரம்மோற்சவத்தில் கலந்து கொண்ட வீடியோ வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajinikanth visited Tirupati Balaji Temple brahmotsavam 2022

People looking for online information on Aishwarya Rajinikanth, Aishwarya Rajinikanth visits Tirupati Temple, Brahmotsavam 2022, Tirupati Balaji Temple will find this news story useful.