சூப்பர் ஸ்டாரின் தர்பார் தியேட்டர் Celebration – ’ரஜினி, தனுஷ் குடும்பத்துடன் ராகவா லாரன்ஸ்…’

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரஜினிகாந்த்-ஏ.ஆர்.முருகதாசின் கூட்டணியில் உருவாகியிருக்கும் தர்பார் திரைப்படம் இன்று வெளியானது. ரஜினியுடன் நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள இந்த படத்துக்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Rajinikanth AR Murugadoss Darbar FDFS Raghava Lawrence watched with Danush Anirudh Family

தர்பார் படத்தை 5 ஷோக்கள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை சென்னை ரோகிணி தியேட்டரில் தர்பார் படம் சிறப்பு காட்சிக்கு ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் செளந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா, இசையமைப்பாளர் அனிருத், தனுஷின் மகன்கள் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் ரசிகர்களோடு அமர்ந்து தர்பார் படத்தை ரசித்தனர்.

Entertainment sub editor