’தர்பார்’ ஆதித்யா அருணாசலத்துக்கு தமிழ்நாடு அரசு போட்ட Order
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 08, 2020 06:31 PM
சூப்பர் ஸ்டார் ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் தர்பார் திரைப்படம் வரும் ஜனவரி 9ம் தேதி (நாளை) வெளியாகிறது. நயன்தாரா, யோகிப்பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என்று 4 மொழிகளில் வெளியாகும் இந்த படத்தைத் தொடர்ந்து சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ’தலைவர் 168’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் நாளை வெளியாகும் தர்பார் படத்துக்கு ஜனவரி 11,12,15,16,17,18,19 ஆகிய தேதிகளில் மட்டும் சிறப்பு காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. தமிழக திரையரங்குகளில் நாள்தோறும் திரை ஒன்றுக்கு 4 ஷோக்கள் மட்டுமே திரையிட அனுமதி உள்ளது.
இந்நிலையில் தர்பார் படத்துக்கு 5 ஷோக்கள் திரையிட இந்த ஆணை அனுமதி வழங்கியிருந்தது. இதையடுத்து இன்று வெளியான அறிக்கையில் ஜனவரி 9,10,13,14 ஆகிய தேதிகளையும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தொடர்ந்து 11 நாட்கள் (ஜனவரி 9-19) தமிழகத்தில் தர்பாருக்கு சிறப்பு காட்சிகள் கிடைத்துள்ளன.